செய்திகள்

பிரச்சனைகளை திசை திருப்ப ராகுலை வம்புக்கு இழுக்கும் பாஜக - காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2018-06-20 10:49 GMT   |   Update On 2018-06-20 10:49 GMT
மகாராஷ்டிராவில் பொதுக்குளத்தில் குளித்த தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதன் மூலம் பிரச்சனைகளை திசை திருப்ப பாஜக முயற்சிக்கிறது என மகாராஷ்டிரா காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. #RahulGandhi
மும்பை :

மகாராஷ்டிர மாநிலம்,  ஜல்காவுன் மாவட்டம் வகாடி என்ற கிராமத்தில், பொதுக்குளத்தில் குளித்த தலித் சிறுவர்கள் மீது உயர் சாதி வகுப்பினர் தாக்குதல் நடத்தி, அவர்களை நிர்வானப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற காட்சியை  சிலர்  வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் பதிவிட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வளர்ந்து வரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் அட்டூழியங்கள் என குறிப்பிட்டு, தாக்குதலுக்குள்ளான இரண்டு சிறுவர்களின் பெயர்களோடு அந்த வீடியோ பதிவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே, எந்த ஒரு சம்பவத்திலும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் விவரங்களை வெளியிடுவது சட்டப்படி தவறு. ஆனால், ராகுல் காந்தி தாக்கப்பட்ட சிறுவர்களின் பெயர்களை சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமோல் ஜெயதேவ் என்பவர் சிறுவர் உரிமைகள் அமர்வில் நேற்று புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு மாகாராஷ்டிரா மாநில சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது. அதில்,  சிறுவர்களின் பெயர்களை சமூக வளைதளங்களில் வெளிட்டது தொடர்பாக அவரிடம் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது உயர் சாதியினர் நடத்தும் தாக்குதல்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காவே ராகுல் காந்திக்கு இவ்விவகாரத்தில் பாஜகவின் தூண்டுதலின் பேரில் சம்மன்  அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார். #RahulGandhi
Tags:    

Similar News