செய்திகள்

விமானத்தை தவறவிட்டதால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நடன இயக்குனர் கைது

Published On 2018-06-19 10:18 GMT   |   Update On 2018-06-19 10:18 GMT
ஜெய்ப்பூரில் இருந்து இன்று மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொலைக்காட்சி நடன இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். #IndiGoBombThreat
ஜெய்ப்பூர்:

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 4.52 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் இண்டிகோ கால் சென்டருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய மர்ம நபர், ஜெய்ப்பூரில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

விமானம் ஏற்கனவே புறப்பட்டுவிட்டதால் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். எனினும், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போதிய பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன் மிரட்டல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த போலீசார், மோகித் குமார் டங்க் என்பவரை கைது செய்துள்ளனர். இவர் தொலைக்காட்சி நிகழ்சியில் நடன இயக்குனாராக பணியாற்றி வருகிறார்.

5 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 4.52 மணிக்கே புறப்பட்டு சென்றுவிட்டது. அதற்குள் மோகித் குமார் விமான நிலையம் வந்தடையாத விரக்தியில் 5.30 மணியளவில் இண்டிகோ கால் சென்டரை தொடர்பு கொண்டு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndiGoBombThreat
Tags:    

Similar News