செய்திகள்

ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம் - களைகட்டிய காங்கிரஸ் அலுவலகங்கள்

Published On 2018-06-19 03:51 GMT   |   Update On 2018-06-19 03:51 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணங்கள் கட்டி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். #HappyBirthdayRahulGandhi #HappyBirthdayRG
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து பிறந்தநாள் விழாக்களை உற்சாகமாக நடத்தி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணம் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.



ராகுல் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் களைகட்டியுள்ளது. கட்சி அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான காங்கிரசார் திரண்டு பிறந்தநாளை கொண்டாடினர். மேளதாளங்கள் முழங்க, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.



பிறந்தநாள் விழாக்கள்  மட்டுமின்றி, கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி ராகுல் காந்தி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆதரவற்றோருக்கு உதவி வழங்குகின்றனர். மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு இனிப்பு மற்றும் பழங்கள் வழங்குகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு கட்சி வேறுபாடு இன்றி பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் உள்ளனர். #HappyBirthdayRahulGandhi #HappyBirthdayRG #RahulBirthday
Tags:    

Similar News