செய்திகள்

நிபா வைரசால் உயிரிழந்த கேரள செவிலியருக்கு உலக சுகாதார நிறுவனம் இரங்கல்

Published On 2018-06-05 12:02 GMT   |   Update On 2018-06-05 12:02 GMT
கேரளா மாநிலத்தில் நிபா வைரசால் உயிரிழந்த செவிலியர் லினிக்கு உலக சுகாதார நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. #Nipahvirus #WHO #Lini
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த லினி என்ற செவிலியர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான லினி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 21-ம் தேதி உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் லினியின் தியாக உள்ளத்திற்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.

சலோமி சர்வா


இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் மக்களுக்காக சேவை செய்து உயிரைவிட்ட மூன்று பெண் செவிலியர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. கேரளா செவிலியர் லினியும் ஒருவர் ஆவார்.

ரசான் அல் நஜார்

கடந்த 3-ம் தேதி காசாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த ரசான் அல் நஜார் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், லிபேரியாவைச் சேர்ந்த சலோமி சர்வா எபோலா நோயாளிகளுக்காக போராடி உயிரை இழந்தார். இவர்கள் மூவரின் தியாகம் இன்றியமையாதது என உலக சுகாதார நிறுவனம் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தது. #Nipahvirus #WHO #Lini


Tags:    

Similar News