செய்திகள்

4 எம்.பி. தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தொடங்கியது

Published On 2018-05-28 02:34 GMT   |   Update On 2018-05-28 02:34 GMT
4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கியது. #KairanaBypoll #Election
புதுடெல்லி:

உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இதேபோன்று மகாராஷ்டிராவின் பந்த்ரா-கோண்டியா மற்றும் பால்கர் என இரு நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் நாகலாந்தில் ஒரு தொகுதி ஆகியவற்றிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதேபோன்று மேற்கு வங்காளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யான ஹுகும் சிங் மரணம் அடைந்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதில் சிங்கின் மகள் மிருகங்கா சிங் அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.  அவருக்கு எதிராக ராஷ்டீரிய லோக் தள கட்சியின் தபசும் ஹசன் நிறுத்தப்பட்டு உள்ளார்.  ஹசனுக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளன.



இதற்கு முன் கோரக்பூர் மற்றும் பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது.  இதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் கைரானா தொகுதிக்கான தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஒரு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், 4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. #KairanaBypoll #Election
Tags:    

Similar News