செய்திகள்

காஷ்மீர் மாநிலத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் நர்ஸ் பிணமாக மீட்பு

Published On 2018-05-23 14:53 GMT   |   Update On 2018-05-23 14:53 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் நர்ஸ் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Murder
ஸ்ரீநகர் :

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரியேசி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்னோ தேவி மருத்துவமனையில் இருந்து நர்ஸ் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் இன்று பிணமாக மீட்க்கப்பட்டுள்ளார். நர்ஸ் உடலின் அருகே கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட அவரது ஆண் நண்பர் மீது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தஹிர் சஜாத் பட் தெரிவித்தார்.

இது குறித்து மருத்துவமனை ஊழியரான மன் மோகன் ஹர்ஜாய் கூறியதாவது :-

பிணமாக மீட்கப்பட்ட பெண் நர்ஸான் வைஷாலி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய அவர் இன்று இடைவேளை நேரமான அதிகாலை 3.30 மணியளவில் வெளியே சென்றுள்ளார். ஆனால், இரண்டு மணி நேரம் ஆகியும் அவர் பணிக்கு திரும்பவில்லை. அவருடைய சக ஊழியர் பல முறை செல்போனில் தொடர்ப்புகொண்டும் அவரை தொடர்ப்புகொள்ள முடியவில்லை.

இறுதியாக காலை 6.27 மணியளவில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த வைஷாலியை மருத்துவமனையில் உள்ள ஆய்வகம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டார். அவருடன் கவலைக்கிடமான நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பவன் சவுகான் என்ற செவிலியர் மீட்க்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

சிகிச்சை முடிந்ததும்  பவன் சவுகானிடம் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Murder
Tags:    

Similar News