செய்திகள்

பாராளுமன்ற, சட்டசபை தேர்தலில் சிவசேனா தனித்து போட்டி - உத்தவ்தாக்கரே

Published On 2018-05-07 07:43 GMT   |   Update On 2018-05-07 07:43 GMT
பாராளுமன்ற தேர்தலிலும் மராட்டிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் சிவசேனா தனித்து போட்டியிடும் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். #ShivSena #UddhavThackeray
நாசிக்:

மத்திய பா.ஜனதா கூட்டணி ஆட்சியிலும், மராட்டிய மாநில பா.ஜனதா கூட்டணி ஆட்சியிலும் சிவசேனா இடம் பெற்று உள்ளது.

பா.ஜனதாவுடன் பல்வேறு வி‌ஷயங்களில் சிவசேனாவுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜனதாவையும் அந்த கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வந்தது.

இனி வரக்கூடிய தேர்தல்களில் பா.ஜனதாவுடன் எந்த கூட்டணியும் கிடையாது என்று சிவசேனா ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதே நேரத்தில் சிவசேனாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தொடர்ந்து ஈடுபட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் கடந்த மாதம் தெரிவித்தார்.

இந்த நிலையில் பா.ஜனதாவுடன் இனி கூட்டணியே கிடையாது. தேர்தல்களில் தனித்து போட்டியிடுவோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே அறிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் நாசிக்கில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் இதை தெரிவித்தார். இது தொடர்பாக உத்தவ்தாக்கரே கூறியதாவது:-


உள்ளாட்சி தேர்தலில் கல்யாண்-டோம்புவிலி மாநகராட்சியில் ஏற்கனவே அறிவித்தபடி பா.ஜனதாவுடன் கூட்டணி தொடரும். அதன்பிறகு பா.ஜனதாவுடன் எந்த தேர்தல்களிலும் சிவசேனா உறவு வைத்துக் கொள்ளாது.

பாராளுமன்ற தேர்தலிலும் மராட்டிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் சிவசேனா தனித்து போட்டியிடும். இந்துக்கள் மற்றும் சாதாரண மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

சிவசேனா எம்.பி. சஞ்சய்ரவுத் கூறும் போது, கர்நாடகா சட்டசபை தேர்தலில் மத்திய அரசின் அனைத்து எந்திரங்களும் பயன்படுத்துப்படுகிறது. கர்நாடாகாவில் அங்கு காங்கிரஸ் கட்சிதான் ‘நம்பர் ஒன்’ இடத்தில் இருக்கிறது. அதிகமான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் முதல் இடத்தை பிடிக்கும் என்றார். #ShivSena #UddhavThackeray
Tags:    

Similar News