செய்திகள்

எஸ்சி, எஸ்டி சட்ட விவகாரம் - முந்தைய தீர்ப்புக்கு தடை கேட்கும் மத்திய அரசு

Published On 2018-05-03 12:43 GMT   |   Update On 2018-05-03 12:43 GMT
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் சுப்ரீம் கோர்ட் முன்னர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞர் இன்று வாதாடியுள்ளார். #SCSTAct
புதுடெல்லி:

எஸ்சி, எஸ்டி பிரிவு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வன்கொடுமை சட்டத்தில் சில திருத்தங்களை செய்து சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் வகையில் உள்ளதாக கூறி நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில், பலர் பலியாகினர்.

இதனை அடுத்து, மத்திய அரசு இவ்விவகாரத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநில அரசுகள் இதேபோல மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தன. இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட் முந்தைய உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று இந்த மறுசீராய்வு மனு மீதான விசாரணை நடந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிகர் வேணுகோபால், முந்தைய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

பட்டியலின மக்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பாக இருக்கவே இந்த திருத்தம் உதவுகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என வேணுகோபால் மேலும் ஒரு கோரிக்கை வைத்தார். இதனை அடுத்து, வழக்கு விசாரணை 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #SCSTAct
Tags:    

Similar News