செய்திகள்

பேஸ்புக் மூலம் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடிய கேரளா பெண் - வைரலாகும் பதிவு

Published On 2018-05-03 11:21 GMT   |   Update On 2018-05-03 11:21 GMT
கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் விதமாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு கோரிக்கை விடுத்து செய்திருந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. #FacebookMatrimony
புதுடெல்லி:

கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடி வருவதாக தனது பேஸ்புக்கத்தில் பதிவு செய்திருந்தார். ஜாதி, மதம் தடையில்லை என #FacebookMatrimony என்ற ஹேஷ்டேக் மூலம் அவர் செய்திருந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.

அந்த பதிவில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அதில், இணையதளங்கள் மூலம் வாழ்க்கை துணையை தேடுவது மிகவும் சிரமமாக உள்ளது. அதற்கு பதிலாக பேஸ்புக் மூலம் தேடுவது எளிதாக உள்ளது. அதனை மேலும் எளிதாக்க பேஸ்புக்கில் புதிய மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சியை விரைவில் எடுக்க வேண்டும் கூறியிருந்தார்.

இவரின் இந்த பதிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரின் #FacebookMatrimony ஹேஷ்டேக் வைரலாக பரவி வருகிறது. அவர் பதிவு செய்த சில நாட்களில் பேஸ்புக் தனது புதிய அப்டேட்டை வெளியிட்டது. அதன்படி, பேஸ்புக் செயலியை கொண்டு டேட்டிங் மற்றும் உறவுமுறைகளை வளர்த்து கொள்ள புதிய வசதியை பேஸ்புக் உருவாக்கி வருகிறது. இதை கொண்டு பேஸ்புக் ப்ரோஃபைல் கொண்டு டேட்டிங் செய்ய தனி ப்ரோஃபைலை உருவாக்க முடியும். இவை டேட்டிங் பரிந்துரைகளுக்கு ஏற்ப வேலை செய்யும் என அறிவித்திருந்தது. #FacebookMatrimony
Tags:    

Similar News