செய்திகள்

வன்கொடுமை சட்டத்துக்கு எதிரான தீர்ப்பு: மத்திய அரசின் மறுஆய்வு மனு மீது நாளை விசாரணை

Published On 2018-05-02 02:45 GMT   |   Update On 2018-05-02 02:45 GMT
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான தீர்ப்பு குறித்து மத்திய அரசின் மறுஆய்வு மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.#SCSTAct #SC #ST #IndianGovt
புதுடெல்லி:

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டப்படி அளிக்கப்படும் புகார்கள் மீது அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது, அவரை நியமித்த மேல்அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன்ஜாமீன் வழங்க தடை இல்லை என்று கடந்த மார்ச் 20-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்து விடும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதையடுத்து, தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த மனு, 3-ந் தேதி (நாளை) பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று தெரிவித்தது.



இதற்கிடையே, இந்த தீர்ப்புக்கு காரணமான பிரதான மனுதாரர், தன்னையும் வழக்கில் இணைத்துக்கொள்ளுமாறு நேற்று மனு தாக்கல் செய்தார். #SCSTAct #SC #ST #IndianGovt
Tags:    

Similar News