செய்திகள்

திருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி மணமகனை கொன்ற பேராசிரியர் கைது

Published On 2018-04-26 07:30 GMT   |   Update On 2018-04-26 07:30 GMT
ஒடிசாவில் தனக்கு பதவி கிடைக்காத ஆத்திரத்தில் தன்னுடன் வேலை பார்த்தவரின் மகனின் திருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி மணமகனை கொன்ற கல்லூரி பேராசிரியர் கைது செய்ப்பட்டுள்ளார். #odisha #parcelbomb
புவனேஷ்வர்:

ஒடிசாவில் திருமணத்தன்று மணமக்களுக்கு வந்த திருமண பரிசு பார்சலில் வெடிகுண்டு இருந்தது. அந்த வெடிகுண்டு வெடித்து மணமகன் சவுமியா சேகர் சாகு மற்றும் அவரது பாட்டி கொல்லப்பட்டுள்ளதுடன் மணப்பெண் படுகாயமடைந்தார்.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கல்லூரி ஆசிரியர் புஞ்சிலால் மெஹர் கொல்லப்பட்ட மணமகனின் தாயாருடன் ஒன்றாக பணிபுரிந்து வந்ததாகவும், தமக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை கொல்லப்பட்ட மணமகனின் தாயாருக்கு நிர்வாகம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த புஞ்சிலால் மெஹர்  திட்டமிட்டு பழிக்கு பழி வாங்கியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இணையத்தில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கும் முறையை தெரிந்து கொண்ட மெஹர் தனது வீட்டிலேயே வெடிகுண்டு பார்சலை தயார் செய்துள்ளார். பின்னர் சுமார் 230 கிலோ மீட்டர் தொலைவு ரயில் பயணம் செய்து அங்கிருந்து வெடிகுண்டு பார்சலை மணமகனின் பெயருக்கு அனுப்பியுள்ளார். இந்த பார்சலானது சுமார் 650 கி.மீட்டர் தொலைவு, 3 பேருந்துகளில் மாறி மாறி பயணம் செய்து இறுதியில் பிப்ரவரி 20 ஆம் தேதி  மணமகனிடம் வந்து சேர்ந்துள்ளது. திருமணத்தன்று மாலை மணமகளுடன் இணைந்து பார்சலை திறந்து பார்த்த மணமகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற இச்சம்பத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க போலீசார் திணறி வந்தனர். குற்றவாளி மிகவும் புத்திசாலிதனமாக இந்த வேலையை செய்துள்ளார். இந்நிலையில், புஞ்சிலால் மெஹரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #odisha #parcelbomb
Tags:    

Similar News