search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wedding gift"

    • பெட்டியை பிரிக்கும் போது அதில் இருக்கும் பொருளை பார்த்து மணமக்கள் ஆச்சரியம் அடைகிறார்கள்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    திருமணத்தின் போது மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் மற்றும் தோழிகள் சில வித்தியாசமான பரிசுகளை வழங்குவதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.

    அதில், மணமகனின் நண்பர்கள் சிலர் மணமேடைக்கு பெரிய பெட்டி ஒன்றை தூக்கி வருகிறார்கள். அந்த பெட்டியை பிரிக்கும் போது அதில் இருக்கும் பொருளை பார்த்து மணமக்கள் ஆச்சரியம் அடைகிறார்கள். அதாவது மணமகன் கார் ஆர்வலராக இருந்துள்ளார்.

    எனவே அவருக்கு அவரது நண்பர்கள் மல்டி-ஸ்போக் அலாய் வீல்களை பரிசாக வழங்கி உள்ளனர். இந்த பரிசை பார்த்த மணமகன் மட்டுமல்லாது மணமகளும் ஆச்சரியப்பட்டு புன்னகைக்கும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது.

    இந்த நிகழ்வு கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. வீடியோ வைரலாகி 7.5 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • உத்தர பிரதேசம் என்றாலே புல்டோசரே நினைவுக்கு வரும் அளவுக்கு மாறிப் போயுள்ளது.
    • அங்கு திருமண பரிசாக மருமகனுக்கு புல்டோசரை மாமனார் வழங்கி பரபரப்பு ஏற்படுத்தினார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், குறிப்பிட்ட குற்ற செயல்களைப் புரிந்தோரின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதனால், தவறுகள் குறைவதுடன், குற்றம் செய்ய குற்றவாளிகள் அஞ்சும் நிலையும் காணப்படுகிறது.

    எனவே, உத்தர பிரதேசம் என்றாலே புல்டோசரே நினைவுக்கு வரும் அளவுக்கு மாறிப் போயுள்ளது. இந்த ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலின்போது கூட இந்த விவகாரம் பற்றிய விவாதம் சூடு கிளப்பியது.

    இதற்கிடையே, ஓய்வுபெற்ற ராணுவ வீரரான பரசுராம் பிரஜாபதி என்பவர் தனது மகள் நேகாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதன்படி, சாவன்கார் பகுதியை சேர்ந்த யோகேந்திரா பிரஜாபதி என்பவருக்கும், நேகாவுக்கும் திருமணம் முடிவானது. யோகேந்திரா கடற்படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், தனது மகள் மற்றும் மருமகனுக்கு திருமண பரிசாக மாமனார் ஆடம்பர ரக காரை தருவதற்கு பதிலாக புல்டோசரை வழங்கியுள்ளார். இதற்கான காரணம் பற்றி பரசுராம் கூறுகையில், தனது மகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு தயாராகி வருகிறார். ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால், பணம் ஈட்ட இந்த புல்டோசரை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

    மணமக்களுக்கு மணமகனின் நண்பர்கள் சிலர் மணமக்களிடம் பிளாஸ்டிக் கேனில் 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தனர். #FuelPriceHike #WeddingBride
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழபருத்திக்குடியை சேர்ந்த இளஞ்செழியனுக்கும், நாகை மாவட்டம் செம்மியவழுரை சேர்ந்த கனிமொழிக்கும் குமராட்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினர்.



    அப்போது மணமகனின் நண்பர்கள் சிலர் மணமக்களிடம் பிளாஸ்டிக் கேனில் 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தனர். இதை மணமக்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

    பொதுவாக திருமண விழாவில், மணமக்களுக்கு பரிசு பொருட்கள், மொய் பணம் ஆகியவற்றை தான் வழங்குவார்கள். ஆனால் தற்போது பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை நெருங்கி வருவதால் பெட்ரோலை பரிசாக அளித்த சம்பவம் மணவிழாவுக்கு வந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த நிமிடம் முதல் நெட்டிசன்கள் ‘மீம்ஸ்’களை பறக்க விட்டனர். இதனால் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப் என்று எங்கும் இந்த மணமக்களின் ‘மீம்ஸ்’கள் தான் நிரம்பி வழிந்தன. #FuelPriceHike #WeddingBride 
    ×