செய்திகள்

பிரதமரை தரக்குறைவாக பேசிய என்.டி.ஆர். மகன் மீது போலீசில் புகார்

Published On 2018-04-21 12:14 GMT   |   Update On 2018-04-21 12:30 GMT
பிரதமர் மோடியை துரோகி என்றும் மோசடிக்காரர் என்றும் தரக்குறைவாக விமர்சித்துப் பேசிய ஆந்திர மாநில தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணா மீது பா.ஜ.க.வினர் இன்று போலீசில் புகார் அளித்தனர்.
ஐதராபாத்:

பிரதமர் மோடியை துரோகி என்றும் மோசடிக்காரர் என்றும் தரக்குறைவாக விமர்சித்துப் பேசிய ஆந்திர மாநில தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணா மீது பா.ஜ.க.வினர் இன்று போலீசில் புகார் அளித்தனர்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க தவறிய மத்திய அரசை கண்டித்து தனது பிறந்தநாளான ஏப்ரல் 20-ம் தேதி (நேற்று) தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் அம்மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், சந்திரபாபு நாயுடுவின் மைத்துனரும் மறைந்த ஆந்திர முதல் மந்திரி என்.டி.ராமாராவின் மகனும், ஆந்திர சட்டசபை உறுப்பினருமான பாலகிருஷ்ணா மிகவும் ஆவேசமாக பேசினார். பிரதமர் மோடியை துரோகி என்றும் மோசடிக்காரர் என்றும் அவர் தாக்கிப் பேசினார்.

ஆந்திர மக்களை நேரில் வந்து சந்தியுங்கள். அவர்கள் உங்களை அடித்து ஓட விடுவார்கள். நீங்கள் எங்கேயும் போய் ஒளிந்துக்கொள்ள முடியாது. பதுங்கு குழிக்குள் நீங்கள் மறைந்திருந்தாலும் பாரதமாதா மண்ணைத்தள்ளி உங்களை புதைத்து விடுவாள் என பிரதமரை நேரடியாக குறிப்பிட்டு பாலகிருஷ்ணா காரசாரமாக பேசினார்,



அவரது பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமரை தரக்குறைவாக பேசி அவமரியாதை செய்ததாக ஆந்திர சட்டமன்ற மேல்சபை பா.ஜ.க. தலைவர் ராமச்சந்திர ராவ் தலைமையில் அக்கட்சியினர் ஓஸ்மானியா காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

பாலகிருஷ்ணாவுக்கு எதிராக அவதூறு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.#tamilnews
Tags:    

Similar News