செய்திகள்

தாவூத் இப்ராகிமின் மும்பை சொத்துக்களை பறிமுதல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2018-04-20 08:51 GMT   |   Update On 2018-04-20 08:51 GMT
தலைமறைவு பயங்கரவாதியும் பிரபல தாதாவுமான தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்யும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #SC #dawoodibrahim #propertyseize
புதுடெல்லி:
    
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஏற்கனவே, கடந்த நவம்பர் மாதத்தில் கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு பணப்பரிமாற்றம் செய்தது மற்றும் கள்ளக்கடத்தல் வழக்குகளில் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள மூன்று சொத்துகளை நிதி அமைச்சக அதிகாரிகள் ஏலம் விட்டுள்ளனர்.

இதற்கிடையே, தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமாக உள்ள முமபையில் உள்ள சொத்துக்களை ஏலம் விடக்கூடாது என அவரது உறவினர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது. 

இந்நிலையில், பிரபல தாதாவான தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்யும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.கே.அகர்வால், தாவூத் இப்ராகிம் உறவினரின் மனுவை தள்ளுபடி செய்தார்.

அப்போது, தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

தாவூத் இப்ராகிமுக்கு பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் சொத்துகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #SC #dawoodibrahim #propertyseize #Tamilnews
Tags:    

Similar News