செய்திகள்

நீதிபதி லோயா மரண வழக்கு: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்

Published On 2018-04-20 05:38 GMT   |   Update On 2018-04-20 05:38 GMT
அமித்ஷாவின் குணநலன்களை படுகொலை செய்வதற்கு நீதித்துறையை பயன்படுத்தியமைக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார்.
லக்னோ:

பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணமடைந்தார். இது தொடர்பாக சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், லோயா மரணத்தில் சிறப்பு விசாரணை தேவை இல்லை என நேற்று தீர்ப்பளித்தனர்.இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டதன் பின்னணியில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் இருந்ததாக கூறியுள்ள பா.ஜனதா, இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘அமித்ஷாவின் குணநலன்களை படுகொலை செய்வதற்கு நீதித்துறையை பயன்படுத்தியமைக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் நல வழக்குகள், பொதுநல வழக்காக பதியப்பட்டு இருக்கிறது’ என்றார்.

இதைப்போல பா.ஜனதாவை சேர்ந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும், ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். நீதிபதி லோயா மரணத்தில் உள்ள அனைத்து குழப்பங்களையும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியிருப்பதாக கூறிய அவர், இதன்மூலம் காங்கிரசின் சதியும் வெளிப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 
Tags:    

Similar News