செய்திகள்

தொலைக்காட்சி செட்-டாப் பாக்ஸ் கருவியில் சிப் பொருத்த திட்டம் - காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

Published On 2018-04-17 05:39 GMT   |   Update On 2018-04-17 06:49 GMT
தொலைக்காட்சி செட்-டாப் பாக்ஸ் கருவியில் சிப் பொருத்த மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வைத்துள்ள பரிந்துரைகளுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

தொலைக்காட்சியில் மக்கள் எந்த நிகழ்ச்சியை அதிக நேரம் காண்கிறார்கள் என்பதை அறிவதற்காக, புதிய தொலைக்காட்சியின் செட்-டாப் பாக்ஸ் கருவியில் பொருத்துவது தொடர்பான திட்டத்தை மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் முன்வைத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு தொலைக்காட்சியையும் எவ்வளவு பேர் காண்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டமானது, விளம்பரதாரர்கள், விளம்பர இயக்குநரகம் ஆகியவைகளுக்கு, எந்தத் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யலாம் என்பது தொடர்பான முடிவை எடுக்க உதவியாக இருக்கும் என்றார்.

இந்நிலையில், மத்திய அரசு முன்வைத்துள்ள இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின்  செய்தி தொடர்பாளர்  தரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளதாவது, “நாட்டு மக்களை வேவு பார்க்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

தனிநபர் ரகசியத்தில் தலையிடும் நடவடிக்கையாக, 4 சுவர்களைக் கொண்ட படுக்கை அறைகளில், தொலைக்காட்சி பெட்டிகளில் எந்த நிகழ்ச்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை மந்திரி ஸ்மிருதி இராணி விரும்புகிறார். மத்தியில் ஆளும் மோடி அரசானது, வேவு பார்க்கும் அரசாகும். மத்திய அரசானது, தனிநபர் ரகசியம் தொடர்பான உரிமையை நசுக்கி விட்டது.” என சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். #TamilNews
Tags:    

Similar News