செய்திகள்

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

Published On 2018-04-16 14:22 GMT   |   Update On 2018-04-16 14:22 GMT
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அரசியல் நோக்கம் உள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். #MLAShivanna #congress #siddaramaiah
பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டசபையில் உள்ள 242 தொகுதிகளில் மே மாதம் 12-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பா.ஜ.க ஆட்சியை பிடிக்கவும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பா.ஜ.க. இரு கட்டங்களாக 154 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்று மாலை 218 பெயர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சியும் வெளியிட்டது.

இந்த பட்டியலில் தற்போது அனேகல் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் சிவன்னா என்பவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையில், இன்று அதிகாலை எம்.எல்.ஏ. சிவன்னாவின் வீட்டிற்கு சென்ற வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அருகாமையில் உள்ள இரு வீடுகளிலும் சோதனை நடத்திய அதிகாரிகள் அவரது வரவு-செலவு கணக்குகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், மைசூரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள வேளையில் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். #tamilnews  #MLAShivanna #congress #siddaramaiah 
Tags:    

Similar News