செய்திகள்

மாநிலங்களவை எம்.பியாக அருண் ஜெட்லி இன்று பதவியேற்பு

Published On 2018-04-14 23:48 GMT   |   Update On 2018-04-14 23:48 GMT
பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று காலை மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றுக் கொள்கிறார் என நிதித்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

சமீபத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு எம்.பிக்கள் நியமனம் செய்யப்பட்ட்டனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக நிதி மந்திரி அருண் ஜெட்லி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையே, உடல்நிலை சரியில்லாததால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி சமீபத்தில் வீடு திரும்பினார்.

இந்நிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று காலை மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றுக் கொள்கிறார் என நிதித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நிதித்துறை சார்பில் டுவிட்டரில் கூறுகையில், அருண் ஜெட்லி மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த ஏப்ரல் 3-ம் தேதி மீண்டும் தேர்வு பெற்றார். சிறுநீரக கோளாறு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வந்ததால் அவர் பதவியேற்கவில்லை. உடல்நலம் குணமடைந்ததை தொடர்ந்து அவர் இன்று காலை எம்.பி.யாக பதவியேற்கிறார். அவருக்கு குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு பாராளுமன்ற வளாகத்தில் காலை 11 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார் என பதிவிடப்பட்டுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News