செய்திகள்

பேரணியில் அமைதியாக பங்கேற்க வேண்டும் - காங்கிரஸ் தொண்டர்களிடம் ஆவேசப்பட்ட பிரியங்கா

Published On 2018-04-12 23:13 GMT   |   Update On 2018-04-12 23:13 GMT
சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக டெல்லி இந்தியா கேட் அருகே நடைபெற்ற காங்கிரஸ் நடத்திய பேரணியில் பங்கேற்ற தொண்டர்களை பிரியங்கா கண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி உள்ளவரை விடுவிக்க கோரி அம்மாநில பா.ஜ.க மந்திரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதே போல உத்தரப்பிரதேசம் உனா நகரில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்து மரணமடைந்தார்.

இதனால் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாவதை கண்டித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நள்ளிரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.

இந்த பேரணியில் ராகுலின் சகோதரி பிரியங்கா வதேரா, அவரது கணவர் ராபர்ட் வதேரா உள்பட காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது சில தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பியபடி பேரணியில் பங்கேற்றனர். இதைக்கண்ட பிரியங்கா வதேரா அந்த தொண்டர்களை கண்டித்தார்.

நாம் எந்த காரணத்துக்காக பேரணி நடத்துகிறோம் என்பது உங்களுக்கு தெரியும். எனவே மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சத்தம் போடவேண்டாம். அமைதியான முறையில் பேரணி செல்ல வேண்டும் என தெரிவித்தார். #TamilNews
Tags:    

Similar News