செய்திகள்

இன்டிகோ விமானத்தில் இருந்து பயணி கீழே இறக்கி விடப்பட்ட விவகாரம் - மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவு

Published On 2018-04-11 05:22 GMT   |   Update On 2018-04-11 05:22 GMT
இன்டிகோ விமானத்தில் இருந்து பயணி கீழே இறக்கி விடப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய விமானத்துறை மந்திரி சுரேஷ் பிரபு உத்தரவிட்டு உள்ளார். #indigo #sureshprabhu
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு நேற்று இன்டிகோ தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவரான இருதய டாக்டர் சவுரப் ராய் என்பவர் விமானத்தில் கொசுத்தொல்லை இருப்பதால் அதனை விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி ஊழியர்களிடம் தெரிவித்தார். ஆனால் ஊழியர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

டாக்டர் சவுரப் ராய்

இதனால் டாக்டருக்கும், விமான ஊழியர்களுக்கும் இடையே மோதல் உருவானதாக தெரிகிறது. இதையடுத்து டாக்டர் சவுரப் ராய் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விடப்பட்டார். மேலும் சம்பந்தப்பட்ட தனியார் விமான ஊழியர்கள் தன்னுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக அந்த டாக்டர் குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் விமானத்தை கடத்தி விடுவதாக மிரட்டியதால் டாக்டரை இறக்கி விட்டதாக விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இன்டிகோ நிறுவனம் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது எனவும் உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய விமானத்துறை மந்திரி சுரேஷ் பிரபு உத்தரவிட்டு உள்ளார். #indigo #sureshprabhu
Tags:    

Similar News