செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 225 விமானங்கள் ரத்து

Published On 2018-04-09 20:03 GMT   |   Update On 2018-04-09 20:03 GMT
மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டதால் 225 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. #MumbaiInternationalAirport #mainrunwayshut
மும்பை:

மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆறு மணி நேரம் மூடப்பட்டதால் 225 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மும்பை விமான நிலையம் இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாகும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 970 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம் நேற்று காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணிவரை மூடப்பட்டது. இன்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதனால் இன்றும் அதே நேரத்தில் பிரதான ஓடுதளம் மூடப்பட உள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக 225 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், கோஏர், விஸ்டாரா உள்ளிட்ட நிறுவனங்களின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 70 ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகளும், 34 ஏர் இந்தியா விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. #MumbaiInternationalAirport #mainrunwayshut #tamilnews
Tags:    

Similar News