search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானங்கள் ரத்து"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
    • சிகாகோ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது.

    சிகாகோ:

    அமெரிக்காவில் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் நேற்று கடுமையான சூறாவளி புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. பலத்த சூறாவளி காற்று மற்றும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்தது.

    இதனால் கிரேட் லேண்ட் மற்றும் சிகாகோ தெற்கு பகுதியில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தது. மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டதால் 97 ஆயிரம் பேர் இருளில் மூழ்கி தவித்து வருகின்றனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    சிகாகோ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது. 2,400 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 2 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகிறார்கள்.

    மேலும் பல நகரங்களில் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    • அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
    • 15 விமானங்கள் காலதாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து அந்தமான், ஐதராபாத், ஹூப்ளி, டெல்லி, மும்பை செல்லும் விமானங்கள் உட்பட 15 விமானங்கள் காலதாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
    • சில விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ், எரிபொருள் கிடைக்காததால் 48 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது.

    தினசரி விமானங்களுக்கான குறைந்த எரிபொருள் விநியோகம் மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக விமானங்கள், ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், சில விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சீனாவில் உருவான கொய்னு புயல் கடந்த வாரம் தைவானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
    • புயலால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு தற்காலிக நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஹாங்காங்:

    சீனாவில் உருவான கொய்னு புயல் கடந்த வாரம் தைவானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அங்கு 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.

    இந்தநிலையில் தற்போது சீனாவின் தன்னாட்சி பகுதியான ஹாங்காங் அருகே கொய்னு புயல் கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 144 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாங்காங்கில் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் புயலால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு தற்காலிக நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

    • தலைநகர் வாஷிங்டனில் புயல் தாக்கத்தால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.
    • தேசிய உயிரியல் பூங்கா, நூலகங்கள், அருங்காட்சியகங்களும் மூடப்பட்டன. புயல்-கனமழை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    மத்திய-அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல், அமெரிக்காவின் 10 மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி, பிலடெல்பியா, அரிசோனா, நியூ மெக்சிகோ உள்பட 10 மாகாணங்களை சூறாவளி புயல் தாக்கியது. பலத்த காற்று காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.

    புயல் தொடர்பாக தேசிய வானிலை மையம் கூறும்போது, சூறாவளி, ஆலங்கட்டி மழை, மின்னல் உள்ளிட்ட அபாயங்கள் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

    வாஷிங்டன்-பால்டி மோர் பிராந்தியம், புயல் தாக்குதலில் முக்கிய பகுதியாக உள்ளது என்று எச்சரிக்கை விடுத்தது. மேலும் இன்று வரை வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    தலைநகர் வாஷிங்டனில் புயல் தாக்கத்தால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. மேலும் தேசிய உயிரியல் பூங்கா, நூலகங்கள், அருங்காட்சியகங்களும் மூடப்பட்டன. புயல்-கனமழை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    இடியுடன் கூடிய மழை காரணமாக நியூயார்க் வாஷிங்டன், பில்டெல்பியா அட்லாண்டா, பால்டிமோர் விமான நிலையங்களில் விமானங்கள் புறப்படுவதை நிறுத்தி வைக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டது.

    2600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 7,700 விமானங்கள் தாமதமாக வந்தன. புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    • துபாயில் இருந்து சென்னை வரும் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னைக்கு வந்தது.
    • விமானங்கள் தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றன.

    சென்னையில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கன மழை கொட்டியது. நேற்று இரவும் பலத்த மழைபெய்தது. இதனால் வானிலை மோசமாக இருந்ததால் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து இன்று அதிகாலை 2.10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், இன்று அதிகாலை 3.10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இலங்கைக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய விமானமும், மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல் சென்னையில் இருந்து நள்ளிரவு 12:30 மணிக்கு கொழும்பு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், அதிகாலை 5:05 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஆகியவை மோசமான வானிலை காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றன.

    லண்டனில் இருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், அபுதாபியில் இருந்து சென்னை வரும் பயணிகள் விமானம், துபாயில் இருந்து சென்னை வரும் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த விமானங்கள் தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றன.

    • விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
    • விமான நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ள பயணிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தன.

    லடாக்கில் உள்ள லே விமான நிலையத்தில். இந்திய விமானப்படைக்கு சொந்தமான போக்குவரத்து விமானம் இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையின் நடுவில் நின்றுவிட்டது. அந்த விமான நிலையத்தில் ஒரே ஒரு ரன்வே மட்டுமே இருப்பதால் வேறு எந்த விமானத்தையும் இயக்க முடியாத நிலை உருவானது. எனவே, அங்கிருந்து புறப்படும் மற்றும் வரக்கூடிய அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    நிலைமையை சரி செய்யவும், திட்டமிட்டபடி நாளை விமானங்களை இயக்கவும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், இதுபற்றி அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும் என்றும் விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதேபோல் ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட அனைத்து விமான நிறுவனங்களும், முன்பதிவு செய்துள்ள பயணிகளை தொடர்பு கொண்டு விமான சேவைகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளன. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் விமான சேவைகளை 3 நாட்கள் ரத்து செய்து உள்ளது.
    • சென்னையில் இருந்து தினமும் மும்பை, அந்தமான் ஐதராபாத்துக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.

    சென்னை:

    கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடும் நிதி பற்றாக்குறை காரணமாக திவால் தீர்மான நடவடிக்கைக்கான நோட்டீசை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனால் இன்று முதல் வருகிற 5-ந் தேதி வரை 3 நாட்களுக்கு கோ பர்ஸ்டின் அனைத்து விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

    இந்த கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் கோ ஏர் விமானங்களை இயக்குகிறது. சென்னையில் இருந்து இந்த விமான நிறுவன விமானங்கள் மும்பை, கேரளா, அந்தமான் ஆகிய மாநிலத்திற்கு விமானங்களை இயக்குகிறது.

    சென்னையில் இருந்து தினமும் மும்பை, அந்தமான் ஐதராபாத்துக்கு விமான சேவை வழங்கப்படுகிறது.

    கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் விமான சேவைகளை 3 நாட்கள் ரத்து செய்து உள்ளதால் சென்னையில் இருந்து மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் மற்ற விமானங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் 'கோ பர்ஸ்ட்' விமானங்கள் செல்லும் மற்ற மாநிலங்களில் இருந்து அதன் வழித்தடத்தில் உள்ள நகரங்களுக்கு விமான கட்டணத்தை மற்ற விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

    ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர். ஜெர்மனி வழியாக செல்லும் வெளிநாட்டு பயணிகளும் பாதிக்கப்பட்டனர். விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொல்கத்தாவில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
    • சென்னை விமான நிலையத்தில் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், நேற்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    அதேபோல் ஐதராபாத்தில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கொல்கத்தாவில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.

    இலங்கையில் இருந்து வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை 2 மணிக்கு, சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து, அதிகாலை 3.15 மணிக்கு, இலங்கைக்கு புறப்பட்டு செல்லும். அந்த இரு விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னை விமான நிலையத்தில் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதற்கு காரணம் இரவு நேரம் கடுமையான குளிர் நிலவுகிறது. எனவே இரவு விமானங்களிலும், அதிகாலை விமானங்களிலும், பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதேபோல் நேற்று இரவு ஐதராபாத் மற்றும் கொல்கத்தா செல்ல வேண்டிய 2 விமானங்களும், இன்று அதிகாலை ஐதராபாத், கொல்கத்தா, இலங்கை ஆகிய இடங்களில் இருந்து சென்னை வர வேண்டிய 3 விமானங்களிலும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இதையடுத்து புறப்பாடு, வருகை ஆகிய 6 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பெரிய ரக விமானங்கள் அதற்குத்தகுந்த, பயணிகள் எண்ணிக்கை இல்லாமல், மிகவும் குறைவாக இருக்கும் சூழ்நிலையில், விமானங்களை காலியாக இயக்க முடியாது. அதே நேரத்தில் அந்தப் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

    இந்த தகவலை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களை கடுமையான பனிப்புயல் தாக்கியது.
    • குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக நியூயார்க் உள்ளிட்ட பல மாகாணங்களில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களை கடுமையான பனிப்புயல் தாக்கியது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் பனி கொட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த பனிப்புயலால் நியூயார்க், பென்சில்வேனியா, ஒரேகான், நெவாடா, இடாஹோ, வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, வயோமிங், கொலராடோ மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பனிப்புயல் காரணமாக சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள் குவிந்துள்ளன. குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.

    இதனிடையே பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று முன்தினம் 137 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும், இன்னும் சில விமானங்கள் மோசமான வானிலை காரணமாக வேறு இடங்களுக்கு மாற்றிவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • பக்ரைனில் இருந்து சென்னை வந்த கோல்ப் ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்திற்கும், இலங்கை, மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகியவை பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
    • மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    மாண்டஸ் புயல் நேற்று இரவு சென்னை அருகே கரையை கடந்து கொண்டிருந்த நேரத்தில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது.

    அதன்படி பக்ரைனில் இருந்து சென்னை வந்த கோல்ப் ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்திற்கும், இலங்கை, மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகியவை பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.

    திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய விமானங்கள், சென்னையில் தரை இறங்க முடியாமல், வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன.

    அதன் பின்பு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவின்பேரில், அந்த விமானங்கள் ஐதராபாத்திற்கு திரும்பி சென்றன. சிங்கப்பூர், இந்தூர், மும்பை, துபாய், தோகா உட்பட 14 விமானங்கள் அவ்வாறு திரும்பி சென்றன.

    அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் உள்நாட்டு விமானங்களான திருவனந்தபுரம், விஜயவாடா, விசாகப்பட்டினம், கோவை, தூத்துக்குடி, பெங்களூரு, ராஜமுந்திரி உள்ளிட்ட 11 புறப்பாடு விமானங்களும், 8 வருகை விமானங்களும் என மொத்தம் 19 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 18 விமானங்கள் ஏ.டி.ஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் ஆகும்.

    நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை பெங்களூரு மற்றும் ஐதராபாத் திருப்பிவிடப்பட்ட விமானங்கள் இன்று அதிகாலையில் இருந்து, ஒன்றின்பின் ஒன்றாக சென்னை வர தொடங்கி உள்ளன. மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.

    ×