செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல்: அமித்ஷா-ராகுல் காந்தி போட்டி பிரசாரம்

Published On 2018-04-04 05:06 GMT   |   Update On 2018-04-04 05:06 GMT
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேற்று போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டனர். #KarnatakaAssemblyElections
பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி நடக்கிறது. ஆட்சியை தக்க வைக்கும் நோக்கத்தில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜனதாவும், தேவகவுடாவின் மத சார்பற்ற ஜனதா தளமும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன.

பா.ஜனதா தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேற்று போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அமித்ஷா நேற்று தனி விமானத்தில் ஜூப்ளி வந்தார். அவரது விமானத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சோதனையில் எதுவும் சிக்கவில்லை.

பின்னர் அவர் காவேரி, பாதாமி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி தலைவர்களை கடுமையாக தாக்கி பேசினார்.

கர்நாடக மாநிலத்தில் மத தலைவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். மத கலவரத்தை காங்கிரஸ் தூண்டி வருகிறது என்று பேசினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சிவமொக்கா மற்றும் தாவண்கரே ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் ஊழலைப் பற்றி பேச அருகதை இல்லை. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்று வந்த எடியூரப்பாவை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து இருக்கிறார்கள்.

வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடிக்கு மத்திய மந்திரி அருண்ஜெட்லியின் மகள் தான் வக்கீலாக இருந்தார். இப்படி ஊழல்களுக்கு துணைபோன பா.ஜனதா தலைவர்கள் ஊழல் பற்றி பேச தகுதி இல்லை.

இவ்வாறு அவர் பேசினார். #KarnatakaAssemblyElections

Tags:    

Similar News