செய்திகள்

கணவன் மனைவி உறவில் மூன்றாவது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம்- உச்ச நீதிமன்றம்

Published On 2018-03-27 07:12 GMT   |   Update On 2018-03-27 07:12 GMT
கணவன்-மனைவி பிரச்சனையில் மூன்றாவது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்து பிரிக்க நினைப்பது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
புதுடெல்லி:

ஆணவக் கொலைகளுக்கு தடை விதிக்க கோரி சக்தி வாகினி என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. திருமண உறவுகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வதால் ஆணவக் கொலைகள் அதிகரிப்பதாகவும், இதுபோன்ற கொலைகளை மத்திய- மாநில அரசுகள் தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது.

‘கணவன்-மனைவி உறவில் மூன்றாவது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்ய முடியாது. திருமண வயதை எட்டிய ஆணும் பெண்ணும் மனமொத்து செய்த திருமணத்தை முறிக்கும் நோக்கத்தில் நடைபெறும் எந்த பஞ்சாயத்தும் சட்டவிரோதமாக கருதப்படும்’ என கூறிய நீதிபதிகள், சக்தி வாகினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர். #Tamilnews
Tags:    

Similar News