search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டப்பஞ்சாயத்து"

    • 6 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்.
    • துணை கமிஷனர் தலைமையில் 8 தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    கோவை

    மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியா பாண்டி(வயது32). இவர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் 12-ந் தேதி பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் கருப்பாக்கால் பகுதியில் நின்ற சத்தியா பாண்டியை 6 பேர் கும்பல் அரிவாள் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர்.

    முதலில் வெட்டிகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் இருந்து 3 குண்டுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து அவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது உறுதியானது.

    இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துணை கமிஷனர் சந்தீஷ் தலைமையில் 8 தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி அவரை கொலை செய்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என விசாரித்தனர். மேலும் இவர் இந்து முன்னணி பிரமுகர் பிஜூ கொல்லப்பட்ட வழக்கில் தொடர்பு இருந்ததால், அவர்கள் யாராவது கொன்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் 10 பேரை பிடித்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் சத்தியா பாண்டியை கொன்றது கோவையை சேர்ந்த சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.

    வடகோவையில் தியேட்டர் ஒன்று உள்ளது. இந்த தியேட்டர் ஒனருக்கும், அதனை குத்தகைக்கு எடுத்தவருக்கும் இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதில் தியேட்டர் உரிமையாளருக்கு ஆதரவாக சஞ்சயும், குத்தகைக்கு எடுத்தவருக்கு ஆதரவாக சத்தியா பாண்டியும் செயல்பட்டுள்ளனர்.

    மேலும் நவ இந்தியாவில் கல்லூரி மாணவர்கள் 2 தரப்பாக பிரிந்து மோதி கொண்டதில் ஒரு பிரிவுக்கு சஞ்சயும், மற்றொரு பிரிவுக்கு சத்தியா பாண்டியும் ஆதரவாக இருந்தனர்.

    இதனால் இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. தொடர்ந்து தன்னுடைய வழியில் சத்தியா பாண்டி குறுக்கே வருவதால் அவர் மீது சஞ்சய் கோபமாக இருந்தார். அவரை கொலை செய்யவும் தனது நண்பர்களுடன் இணைந்து திட்டமிட்டார்.

    அதன்படி அவர், சம்பவத்தன்று, கருப்பாக்கால் பகுதியில் நின்ற சத்தியா பாண்டியை துரத்தி சென்று அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • எஸ்.பி. தீபா சத்யன் அறிவுரை
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

    கலவை:

    கலவை போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து, கலவை போலீஸ் நிலையத்திற்கு அரசால் வழங்கப்பட் டுள்ள பொருட்களையும் பார்வையிட்டார்.

    மேலும் கலவைப் பகுதியில் உள்ள ரவுடிகள் குறித்தும் விசாரித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    போலீஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்துள்ளதை பார்வை யிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை உடனுக்குடன் முடிக்க வும், போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    போலீஸ்நிலையத்துக்கு வருபவர்களிடத்தில், எளிமையாக வும், அன்பாகவும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். இன்ஸ்பெக்டர் பாரதி தாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், மூர்த்தி, சங்கர் ஆகி யோர் உடன் இருந்தனர்.

    • திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் வக்கீல் என கூறி கட்டப்பஞ்சாயத்து பேசியதாகவும், பலரிடம் பணம் பறித்து வருவதாகவும் திண்டுக்கல் வக்கீல் சங்கத்துக்கு புகார் வந்தது.
    • உண்மையிலேயே வக்கீல் தொழில் அல்லது பத்திரிகை தொழிலில் உள்ளனரா? என விசாரிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் வக்கீல் என கூறி கட்டப்பஞ்சாயத்து பேசியதாகவும், பலரிடம் பணம் பறித்து வருவதாகவும் திண்டுக்கல் வக்கீல் சங்கத்துக்கு புகார் வந்தது.

    இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் வக்கீல் சங்க தலைவர் மூர்த்தி, செய லாளர் குமரேசன் மற்றும் வக்கீல்கள் இப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    நேற்று வடமதுரை அருகே ஜோதிமுருன் மற்றும் அலெக்சாண்டர் ஆகிய 2 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து வக்கீல்கள் தெரிவிக்கையில், பிடிபட்ட 2 பேரும் வக்கீல் தொழில் செய்வதாக பலரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் வாங்கி ஏமாற்றி உள்ளனர். இதில் ஒருவர் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். மேலும் நிருபர் என்ற கார்டும் வைத்துள்ளார். இவர்கள் உண்மையிலேயே வக்கீல் தொழில் அல்லது பத்திரிகை தொழிலில் உள்ளனரா? என விசாரிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம்.

    ஆனால் ஒரு சில போலீசாரும் இவர்களுக்கு துணையாக இருப்பதால் வழக்குப்பதிவு செய்ய தாமதம் செய்கின்றனர். இதேபோல் வக்கீல் என கூறிக்கொண்டு பொது மக்களை ஏமாற்றும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இரவு முழுவதும் நகர் வடக்கு ேபாலீஸ் நிலை யத்திலேயே காத்திருந்த வக்கீல்கள் இன்று காலையிலும் அதே இடத்தில் இருந்தனர். பிடிபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நாங்கள் இங்கிருந்து நகரமாட்டோம் என தெரிவித்ததால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான சூழல் உருவானது.

    ×