search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people in forgery case"

    • திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் வக்கீல் என கூறி கட்டப்பஞ்சாயத்து பேசியதாகவும், பலரிடம் பணம் பறித்து வருவதாகவும் திண்டுக்கல் வக்கீல் சங்கத்துக்கு புகார் வந்தது.
    • உண்மையிலேயே வக்கீல் தொழில் அல்லது பத்திரிகை தொழிலில் உள்ளனரா? என விசாரிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் வக்கீல் என கூறி கட்டப்பஞ்சாயத்து பேசியதாகவும், பலரிடம் பணம் பறித்து வருவதாகவும் திண்டுக்கல் வக்கீல் சங்கத்துக்கு புகார் வந்தது.

    இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் வக்கீல் சங்க தலைவர் மூர்த்தி, செய லாளர் குமரேசன் மற்றும் வக்கீல்கள் இப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    நேற்று வடமதுரை அருகே ஜோதிமுருன் மற்றும் அலெக்சாண்டர் ஆகிய 2 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து வக்கீல்கள் தெரிவிக்கையில், பிடிபட்ட 2 பேரும் வக்கீல் தொழில் செய்வதாக பலரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் வாங்கி ஏமாற்றி உள்ளனர். இதில் ஒருவர் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். மேலும் நிருபர் என்ற கார்டும் வைத்துள்ளார். இவர்கள் உண்மையிலேயே வக்கீல் தொழில் அல்லது பத்திரிகை தொழிலில் உள்ளனரா? என விசாரிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம்.

    ஆனால் ஒரு சில போலீசாரும் இவர்களுக்கு துணையாக இருப்பதால் வழக்குப்பதிவு செய்ய தாமதம் செய்கின்றனர். இதேபோல் வக்கீல் என கூறிக்கொண்டு பொது மக்களை ஏமாற்றும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இரவு முழுவதும் நகர் வடக்கு ேபாலீஸ் நிலை யத்திலேயே காத்திருந்த வக்கீல்கள் இன்று காலையிலும் அதே இடத்தில் இருந்தனர். பிடிபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நாங்கள் இங்கிருந்து நகரமாட்டோம் என தெரிவித்ததால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான சூழல் உருவானது.

    ×