search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Katta Panchayat"

    • சபாநாயகரிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
    • கட்ட பஞ்சாயத்து, மிரட்டல், நில அபகரிப்பு போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனு வில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அலுவல கத்துக்கு தினந்தோறும் சிலர் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்களை முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் போல வெளியில் காட்டிக்கொள்கின்றனர்.

    அதன்மூலம் கட்ட பஞ்சாயத்து, மிரட்டல், நில அபகரிப்பு போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு பொதுமக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

    எனவே இத்தகைய நபர்களை இனம்கண்டு அவர்களை சட்டசபை வளாகத்திற்குள் அனுமதிக்க க்கூடாது இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    புதுவை சட்டசபையில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் புரோ க்கர்கள் இருப்பதாகவும், கட்ட பஞ்சாயத்து நடைபெறுவதாகவும் ஏற்கனவே முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி யிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 6 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்.
    • துணை கமிஷனர் தலைமையில் 8 தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    கோவை

    மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியா பாண்டி(வயது32). இவர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் 12-ந் தேதி பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் கருப்பாக்கால் பகுதியில் நின்ற சத்தியா பாண்டியை 6 பேர் கும்பல் அரிவாள் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர்.

    முதலில் வெட்டிகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் இருந்து 3 குண்டுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து அவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது உறுதியானது.

    இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துணை கமிஷனர் சந்தீஷ் தலைமையில் 8 தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி அவரை கொலை செய்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என விசாரித்தனர். மேலும் இவர் இந்து முன்னணி பிரமுகர் பிஜூ கொல்லப்பட்ட வழக்கில் தொடர்பு இருந்ததால், அவர்கள் யாராவது கொன்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் 10 பேரை பிடித்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் சத்தியா பாண்டியை கொன்றது கோவையை சேர்ந்த சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.

    வடகோவையில் தியேட்டர் ஒன்று உள்ளது. இந்த தியேட்டர் ஒனருக்கும், அதனை குத்தகைக்கு எடுத்தவருக்கும் இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதில் தியேட்டர் உரிமையாளருக்கு ஆதரவாக சஞ்சயும், குத்தகைக்கு எடுத்தவருக்கு ஆதரவாக சத்தியா பாண்டியும் செயல்பட்டுள்ளனர்.

    மேலும் நவ இந்தியாவில் கல்லூரி மாணவர்கள் 2 தரப்பாக பிரிந்து மோதி கொண்டதில் ஒரு பிரிவுக்கு சஞ்சயும், மற்றொரு பிரிவுக்கு சத்தியா பாண்டியும் ஆதரவாக இருந்தனர்.

    இதனால் இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. தொடர்ந்து தன்னுடைய வழியில் சத்தியா பாண்டி குறுக்கே வருவதால் அவர் மீது சஞ்சய் கோபமாக இருந்தார். அவரை கொலை செய்யவும் தனது நண்பர்களுடன் இணைந்து திட்டமிட்டார்.

    அதன்படி அவர், சம்பவத்தன்று, கருப்பாக்கால் பகுதியில் நின்ற சத்தியா பாண்டியை துரத்தி சென்று அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அவர்களை தேடி வருகின்றனர்.

    ×