செய்திகள்

என்.சி.சி. பயிற்சி பற்றி எனக்கு தெரியாது - ராகுல் காந்தி

Published On 2018-03-24 22:46 GMT   |   Update On 2018-03-24 22:46 GMT
கர்நாடகாவின் மைசூரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, என்.சி.சி. பயிற்சி பற்றி எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.
பெங்களூர்:

கர்நாடகா மாநில சட்டசபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 2-வது வாரம் தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட தலைமை தேர்தல் கமி‌ஷன் ஆலோசித்து வருகிறது. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் தீவிரமாக உள்ளார்.

தலைவர் பதவியை ஏற்ற பிறகு சந்திக்கும் முக்கிய தேர்தல் என்பதால் இதை அவர் கவுரவ பிரச்சனையாகவும் எடுத்துள்ளார். இதனால் கர்நாடகாவில் கடந்த மாதமே ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.



இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் நேற்று 4-வது கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு சாம்ராஜ்நகர், மாண்டியா, மைசூர் மாவட்டங்களுக்கு செல்கிறார்.

இந்நிலையில், மைசூருவில் கல்லூரி ஒன்றில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவியின் கேள்விக்கு பதிலளித்த ராகுல், என்சிசி பயிற்சி குறித்து தனக்கு தெரியாது என கூறினார்.

மைசூரு கல்லூரியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது மாணவி ஒருவர், என்.சி.சி. படையில் உள்ளவர்கள 'சி' சான்றிதழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்ன சலுகை வழங்குவீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

அப்போது பதிலளித்த ராகுல் காந்தி, என்.சி.சி. பயிற்சி குறித்த விவரங்கள் எனக்கு தெரியாது. எனவே, இந்த கேள்விக்கு பதிலளிக்க மாட்டேன் என தெரிவித்தார். மேலும், கல்லூரி மாணவிகள் பலர் ராகுலல் காந்தியுடன் செல்பி எடுத்தனர்.

என்.சி.சி. பயிற்சியில் ஏ பி சி பிரிவுகள் உள்ளது. இதில் சி பிரிவு சான்றிதழ் பெற்றவர்களுக்கு ராணுவம் மற்றும் அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Tags:    

Similar News