செய்திகள்

பிச்சைக்காரர்கள் அதிகமுள்ள மாநிலம் மேற்கு வங்காளம் - மக்களவையில் அரசு தகவல்

Published On 2018-03-21 22:08 GMT   |   Update On 2018-03-21 22:08 GMT
அதிகளவு பிச்சைக்காரர்கள் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலோட் மக்களவையில் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது:

நாடு முழுவதும் சுமார் 4.13 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். இதில் 2.21 லட்சம் ஆண்களும், 1.91 லட்சம் பெண்களும் உள்ளனர்.

பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் மேற்கு வங்காளம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 81 ஆயிரத்து 244 பேர் பிச்சைக்காரர்கள் உள்ளனர்.

இதேபோல், இரண்டாவது இடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தில் 66 ஆயிரம் பேரும், மூன்றாவது இடத்தில் உள்ள பீகாரில் 30 ஆயிரம் பேரும் உள்ளனர். தமிழகம் சுமார் 6 ஆயிரத்து 800 பிச்சைக்காரர்களுடன் 33-வது இடம் பிடித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூரிலும், கிழக்கு மாநிலமான மேற்கு வங்காளத்திலும் பெண் பிச்சைக்காரர்கள் அதிகளவில் உள்ளனர்.

யூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லியில் அதிகமாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர். மேலும், டாமன் - டையூவில் 22 பேரும், லட்சத்தீவில் இரண்டு பிச்சைக்காரர்களும் உள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News