செய்திகள்

பா.ஜனதா அரசின் ஓராண்டு நிறைவு - உத்தரபிரதேசத்தில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள்: முதல்-மந்திரி அறிவிப்பு

Published On 2018-03-20 00:13 GMT   |   Update On 2018-03-20 00:13 GMT
பா.ஜனதா அரசின் ஓராண்டு நிறைவு முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு துறைகளில் விரைவில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனவும் யோகி ஆதித்யநாத் கூறினார்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா அரசு நேற்று ஓராண்டை நிறைவு செய்தது. இதையொட்டி தலைநகர் லக்னோவில் சிறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற யோகி ஆதித்யநாத், ஊழலுக்கு எதிரான இணையதளம் ஒன்றை தொடங்கி வைத்தார்.

மாநிலத்தில் நடைபெறும் ஊழல் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்தால், அதன் மீது அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதியளித்தார். ஊழல் புரிபவர்கள் மற்றும் அதை ஆதரிப்பவர்களுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்த இந்த இணையதளம் வழிவகுக்கும் என அவர் கூறினார்.

இதைப்போல மாநிலத்தின் பல்வேறு துறைகளில் விரைவில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனவும் யோகி ஆதித்யநாத் கூறினார். அதன்படி போலீஸ் கான்ஸ்டபிள்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகள் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரிகள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா, கவர்னர் ராம் நாயக் மற்றும் மாநில பா.ஜனதா தலைவர் மகேந்திரநாத் பாண்டே என பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News