செய்திகள்

மத்திய பிரதேச மந்திரியின் மருமகள் தற்கொலை

Published On 2018-03-18 07:53 GMT   |   Update On 2018-03-18 07:53 GMT
மத்திய பிரதேசத்தில் கணவர் 2-வது திருமணத்துக்கு முயன்றதால் பொதுப்பணித்துறை மந்திரியின் மருமகள் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போபால்:

மத்தியபிரதேச மாநிலத்தில் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மந்திரி சபையில் பொதுப்பணித்துறை மந்திரியாக இருப்பவர் ராம்பால்சிங். இவரது மருமகள் பிரித்தி.

இந்த நிலையில் பிரித்தி உதயபுரா பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் 2-வது திருமணம் செய்ய முயன்றதால் பிரித்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மந்திரி என்பதால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற காரணத்தால் பிரித்தி இந்த முடிவை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொண்ட பிரித்தி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் தற்கொலைக்கான காரணம் குறித்து குறிப்பிடவில்லை. அவர் கடிதத்தில் யாரையும் குற்றம்சாட்டவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த தற்கொலை தொடர்பாக ராம்பாலசிங் மந்திரி பதவியில் இருந்து பதவிவிலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News