செய்திகள்

இந்தியாவில் 2025-ம் ஆண்டிற்குள் காசநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும்- பிரதமர் மோடி

Published On 2018-03-13 08:25 GMT   |   Update On 2018-03-13 08:25 GMT
டெல்லியில் 'காசநோயை ஒழிப்போம்' மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் காசநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என கூறினார். #modi #endtbsummit
புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்ற 'காசநோயை ஒழிப்போம்' மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் காசநோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் துவங்கினார். அம்மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியாவில் காசநோய் இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. அதனை ஒழிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் காசநோயால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக ஏழை மக்கள் இந்நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலை குறித்து ஆராய வேண்டும். அதனால் நாம் புதிய வழிமுறைகளை கையாள வேண்டும்.

இந்தியாவில் காசநோயானது 2025-ம் ஆண்டிற்குள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். அதனை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். பல மாநிலங்களைச் சேர்ந்த மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

காசநோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டாலும், அதனை தடுப்பதற்கு 1 ஆண்டுக்காலம் போதும். விரைவில் காசநோய் பரவுவதை தடுப்பது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

காசநோயானது முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் 75 சதவீதம் குணமடையும். ஆனால் பலர் அதற்காக சிகிச்சை எடுக்காததால் நோயானது தீவிரமடைகிறது. அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. #modi #endtbsummit #tamilnews

Tags:    

Similar News