செய்திகள்

டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்புக்கு இந்தியா வரவேற்பு

Published On 2018-03-09 18:25 GMT   |   Update On 2018-03-09 18:25 GMT
வரும் மே மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பை இந்தியா வரவேற்றுள்ளது என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 புதுடெல்லி:

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள  வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க உள்ளார் எனவும், இவர்களது சந்திப்பு வருகிற மே மாதம் நடக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், வரும் மே மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பை இந்தியா வரவேற்றுள்ளது என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறுகையில், மே மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் சந்திப்பை இந்தியா வரவேற்கிறது. இந்த சந்திப்பின் மூலம் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் தணிந்து அமைதி நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அமைதி திரும்புவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் எனவும் தெரிவித்துள்ளார். #NorthKorea #US #TamilNews
Tags:    

Similar News