செய்திகள்
கொலை செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சுகைப்.

கேரளாவில் காங். நிர்வாகி கொலையில் கம்யூனிஸ்டு தொண்டர்கள் 2 பேர் போலீசில் சரண்

Published On 2018-02-19 05:26 GMT   |   Update On 2018-02-19 05:26 GMT
கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தொண்டர்கள் 2 பேர் போலீசில் நேற்று சரண் அடைந்துள்ளனர்.
திருவனந்தபுரம்:


பல இடங்களில் இந்த மோதல் படுகொலையிலும் முடிந்துள்ளதால் அரசியல் கட்சி தொண்டர்கள் இடையே தொடர்ந்து மோதல் உருவாகும் சூழ்நிலையும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் அருகே மட்டனூர் என்ற இடத்தில் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சுகைப் என்பவர் கடந்த 13-ந்தேதி வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. அதேசமயம் இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மறுத்தது.

இந்த நிலையில் மாலூர் போலீஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஆகாஷ், ரிஜின்ராஜ் ஆகிய 2 பேர் நேற்று சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர்களில் ஆகாஷ் என்பவர் கம்யூனிஸ்டு செயலாளரான ஜெயராஜன் என்பவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படமும் வெளியாகி உள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் சரணடைந்த 2 பேரும் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்றும் அவர்கள் பணத்துக்காக போலீசில் சரணடைந்துள்ள போலி என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி இன்று முதல் கண்ணூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. இதனால் இந்த கொலை தொடர்பான பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News