செய்திகள்

சாதாரண செல்போன்களில் ஜி.பி.எஸ். வசதி கட்டாயம் ஆகிறது

Published On 2018-02-14 03:46 GMT   |   Update On 2018-02-14 03:46 GMT
ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவ அனைத்து செல்போன்களில் ஜி.பி.எஸ். வசதி பொருத்தும் மத்திய அரசின் உத்தரவு கட்டயாம் ஆகிறது. #Cellphone #Mobile #GPS
புதுடெல்லி:

ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு, அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து உதவுவதற்காக, அனைத்து செல்போன்களிலும் ஜி.பி.எஸ். வசதி மற்றும் எச்சரிக்கை பொத்தான் இடம்பெறுவது கட்டாயம் என்று கடந்த 2016-ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டது.

ஆனால், ஜி.பி.எஸ். வசதியை பொருத்துவதால், செல்போனின் உற்பத்தி செலவு அதிகமாகி விடும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் ஆட்சேபனை தெரிவித்ததால், சாதாரண செல்போன்களுக்கு கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு விலக்கு அளித்தது.

இந்நிலையில், மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி மனோஜ் சின்காவையும், செல்போன் உற்பத்தியாளர்களையும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக செயலாளர் கடந்த மாதம் சந்தித்து பேசினார். இதையடுத்து, ஜி.பி.எஸ். வசதி பொருத்த சாதாரண செல்போன்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கை ரத்து செய்வதாகவும், 2016-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீடிக்க செய்வதாகவும் தொலைத்தொடர்பு அமைச்சகம் உறுதி அளித்தது.

எனவே, சாதாரண செல்போன்களில் ஜி.பி.எஸ். வசதி கட்டாயம் ஆகிறது. இதன்மூலம், செல்போன்களில் எச்சரிக்கை பொத்தான் இடம்பெறச் செய்வதையும் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. #Cellphone #Mobile #GPS
Tags:    

Similar News