செய்திகள்

காஷ்மீர்: பாரமுல்லா காவல் நிலையம் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் - ஒருவர் காயம்

Published On 2018-01-22 17:02 GMT   |   Update On 2018-01-22 17:02 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே உள்ள காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 2 போலீஸ் கான்ஸ்டெபிள் காயமடைந்தனர். #JammuKashmir #Baramulla
ஜம்மு:

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே உள்ள ஒரு காவல் நிலைய வளாகத்தில் இன்று மாலை தீவிரவாதிகள் சிலர் கையெறி குண்டுகளை வீசினர். இந்த குண்டுகள் வெடித்ததில் 1 காவலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலின் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக புல்வாமா மாவட்டம் பாம்போர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது தீவிரவாதிகள் சிலர் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார்.

அதைத்தொடர்ந்து லசிபோரா பகுதியிலும் போலீஸ் குழு மீது சில தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து போலீசார் பதில் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை விரட்டி அடித்துள்ளனர். இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை.

கடந்த ஐந்து நாட்களாக காஷ்மீரில், பாகிஸ்தான் தீவிரவாதிகளும், ராணுவத்தினர் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #Baramulla #PoliceStation #tamilnews
Tags:    

Similar News