செய்திகள்

கட்டிப்புடி ராஜதந்திரம்: எதிர்க்கட்சிகள் விமர்சனத்துக்கு மோடி பதில்

Published On 2018-01-20 06:26 GMT   |   Update On 2018-01-20 06:27 GMT
கட்டிப்புடி ராஜதந்திரம் குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, தான் சாதாரண மனிதன் என்றும் மரபுகள் பற்றி தனக்கு தெரியாது என்றும் கூறினார். #PMModi #hugplomacy
புதுடெல்லி:

உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கும் போது, தனிப்பட்ட முறையில் அவர்களை விமான நிலையம் வரை சென்று வரவேற்பதும், அவர்களை நெகிழ்ச்சியுடன் கட்டிப்பிடித்து வரவேற்பு அளிக்கும் வழக்கத்தையும் கொண்டுள்ளார். 

பிரதமர் மோடியின், இந்த நெகிழ்ச்சி மிகு வரவேற்பு உலக தலைவர்களையும் நெகிழ்ச்சி அடையச்செய்கிறது. பிரதமர் மோடியின், இத்தகைய வரவேற்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கவும் செய்கின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில், மோடியின் கட்டிப்புடி ராஜதந்திரம் பலிக்கவில்லை என்று விமர்சித்து இருந்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்திலும் மோடி, வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கும் போது ஏற்பட்ட நிகழ்வுகளை வைத்து விமர்சித்து ஒரு வீடியோவும் வெளியிட்டு இருந்தது.



இந்த நிலையில், ஆங்கில தனியார் தொலைக்காட்சி  பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். இப்பேட்டியில், கட்டிப்புடி ராஜதந்திரம் பற்றிய விமர்சனங்கள் குறித்து பேசிய மோடி, “நான் ஒரு சாதாரண நபர், மரபுகள் பற்றி எனக்கு தெரியாது. பாதகமான சூழலை வாய்ப்பாக மாற்றுவது எனது அடிப்படை இயல்பு. பிறரை போல நான் பயிற்சி பெற்றிருந்தால், நானும் உலக தலைவர்களை சந்திக்கும் போது கை குலுக்கி விட்டு நின்றிருப்பேன். ஆனால், நான் ஒரு சாதாரண மனிதன், எனது நாட்டுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் இருப்பதை  உறுதி செய்யவே நான் முயற்சிக்கிறேன்” என்றார். 

‘எனது உடலின் ஒவ்வொரு அணுவும் நாட்டிற்கு கடன்பட்டுள்ளது. நாட்டின் மக்களுக்காக பணியாற்றுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண மனிதனின் கண்களில் நான் அவரது திருப்தியை நான் காணும்போது என்னுள் ஒரு புது உத்வேகம் பிறக்கிறது. ஆட்சியின் மீது மக்கள் விமர்சனங்களை வைக்கும் போது அதை குறையென கருத முடியாது. மக்கள் முன் வைக்கப்படும் விமர்சனங்களில் இருந்து குறைகளை உணர்ந்து அவற்றில் இருந்து நம்மை நாம் உயர்த்திக்கொள்ள தான் வேண்டும்” என்றும் மோடி தெரிவித்தார்.   #PMModi #hugplomacy #tamilnews
Tags:    

Similar News