செய்திகள்

90 ஆண்டுகளாக மண்ணை உண்டு உயிர்வாழ்ந்துவரும் விநோத மனிதர்

Published On 2018-01-19 16:18 GMT   |   Update On 2018-01-19 16:18 GMT
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 100 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 90 ஆண்டுகளாக மண்ணை உணவாக உட்கொண்டு உயிர்வாழ்ந்து வருகிறார். #Jharkhand #KaruPaswan #mudeater

ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 100 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 90 ஆண்டுகளாக மண்ணை உணவாக உட்கொண்டு உயிர்வாழ்ந்து வருகிறார்.

11 வயதில் வறுமை காரணமாக மண் சாப்பிட துவங்கியவர் தற்போது 100 வயதாகியும் அந்த பழக்கத்தை விடமுடியாமல் உள்ளார். மண் உண்ணாமல் உயிர் வாழ முடியாது என்ற நிலையில் இப்போது அவர் இருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரு பஸ்வான் என்ற 100 வயதான முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். மற்றவர்களிடம் இல்லாத ஒரு விநோத உணவு பழக்கம் அவரிடம் உள்ளது. அதாவது அவர் உயிர்வாழ்வதற்காக மண்ணை உணவாக உட்கொண்டு வருகிறார்.



தனது 11வது வயதில் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாலும், போதிய வருமானம் இல்லை என்பதாலும் வேறு வழியின்றி மண்ணை சாப்பிட துவங்கியுள்ளார். ஆனால் காலப்போக்கில் அந்த பழக்கத்தை விடமுடியாமல், இப்போதும் மண்ணை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறார். அந்த முதியவர் ஒரு நாளைக்கு ஒரு கிலோ மண் வரை சாப்பிட்டு விடுவாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சிறு வயதில் வறுமை காரணமாக இந்த மண் சாப்பிடும் பழக்கம் வந்தது. ஆனால் நாளாக நாளாக நான் இதற்கு அடிமையாகிவிட்டேன். இப்போது என்னால் மண் சாப்பிடும் பழக்கத்தை விட முடியவில்லை என கூறியுள்ளார். தினசரி மண் சாப்பிடும் வழக்கம் இருந்தாலும் அவருடைய ஆரோக்கியத்தில் எந்த குறையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Jharkhand #KaruPaswan #mudeater #tamilnews
Tags:    

Similar News