செய்திகள்

கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் எடுத்த முதல் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

Published On 2018-01-17 06:59 GMT   |   Update On 2018-01-17 06:59 GMT
வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் 100-வது செயற்கைக் கோளான கார்ட்டோசாட்-2, கடந்த 12-ம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டு, பூமியில் இருந்து சுமார் 510 கி.மீ. உயரத்தில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோ வரலாற்றில் இது புதிய சாதனையாக, புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.

இந்நிலையில், கார்ட்டோசாட் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள ஹொல்கார் கிரிக்கெட் மைதானத்தை உள்ளடக்கிய இந்த படம் ஜனவரி 15-ம் தேதி எடுக்கப்பட்டது.

கார்ட்டோசாட்-2 செற்கைக்கோள் இயற்கை வளங்களை நுட்பமாக ஆய்வு செய்யும். இதற்காக அந்த செயற்கைக் கோளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொலையுணர்வு கருவிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இது தவிர கடல் வழி போக்குவரத்து கண்காணிப்பு, நீர்வள மேம்பாடு, நகர்ப்புற உள் கட்டமைப்பு பணிகளுக்கும் இந்த செயற்கைக்கோள் தரும் தகவல்கள் உதவியாக இருக்கும். அதோடு இந்திய ராணுவத்துக்கும் கார்ட்டோசாட்-2 செயற்கைக் கோள் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News