செய்திகள்

ஆந்திராவில் ஓடும் அனைத்து நதிகளும் இணைக்கப்படும்: சந்திரபாபு நாயுடு

Published On 2018-01-16 06:01 GMT   |   Update On 2018-01-16 06:01 GMT
கோதாவரி, கிருஷ்ணா உள்பட ஆந்திர மாநிலத்தில் ஓடும் அனைத்து நதிகளும் இணைக்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறினார்.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

அமராவதியில் ஆந்திர மாநில தலைநகரம் கட்டும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. கோதாவரி, கிருஷ்ணா உள்பட மாநிலத்தில் ஓடும் அனைத்து நதிகளும் இணைக்கப்படும்.

நாட்டிலேயே ஆந்திரா வளர்ச்சி அடைந்த மாநிலமாக திகழ வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆந்திர மாநிலத்தை வளர்ச்சியடைய செய்ய ஏழுமலையான் எனக்கு சக்தியை கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன்.

குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆந்திர மாநில மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும். ஆந்திராவில் ஐ.டி. பார்க், தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Tags:    

Similar News