செய்திகள்

கர்நாடக சட்டசபைக்கு ஒரேகட்ட வாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் தயார்

Published On 2018-01-12 14:42 GMT   |   Update On 2018-01-12 14:41 GMT
கர்நாடக சட்டசபைக்கு ஒரேகட்டத்தில் வாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் தயாராக உள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சிவ் குமார் தெரிவித்துள்ளார்.#Karnatakaassembly
பெங்களூரு:

கர்நாடக மாநில எம்.எல்.ஏ.க்களின் பதவிக்காலம் வரும் மே மாதம் 5-ம் தேதியுடன் நிறவைடைவதால் 224 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் வெகு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

புதிய வாக்களர்களை சேர்ப்பதற்கான காலக்கெடு ஜனவரி 22-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த 2013-ம் ஆண்டில் நடைபெற்றதுபோல் இந்த தேர்தலையும் ஒரேகட்டமாக நடத்த மாநில தேர்தல் கமிஷன் தயாராக இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சிவ் குமார் தெரிவித்துள்ளார்.

எனினும், இதுதொடர்பான இறுதி முடிவை தேசிய தேர்தல் ஆணையம் தான் தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாநிலம் முழுவதும் சராசரியாக 72 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன என்பது நினைவிருக்கலாம். #tamilnews #Karnatakaassembly
Tags:    

Similar News