செய்திகள்

பேரிடர் நிவாரண நிதியை கட்சிக்காக பயன்படுத்தினாரா?: கேரள முதல்வர் மீது புகார்

Published On 2018-01-10 09:55 GMT   |   Update On 2018-01-10 09:55 GMT
கட்சி பணிக்காக பினராயி விஜயன் உபயோகித்த ஹெலிகாப்டரின் வாடகையை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கி திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:

கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதியன்று முதல்வர் பினராய் விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் பங்கேற்பற்றிருந்தார். அப்போது, ஒக்கி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய குழு திருவனந்தபுரம் வந்தடைந்தது. இதனையடுத்து தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் மூலமாக திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அவர் சென்றார்.

இந்நிலையில், ஹெலிகாப்டர் வாடகை தொகையான ரூ.8 லட்சத்தை, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கி திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், அந்த உத்தரவு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News