செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் நலனில் 6 மாநிலங்கள் மட்டுமே அக்கறை செலுத்துகின்றன - பாராளுமன்ற குழு அறிக்கையில் தகவல்

Published On 2018-01-06 18:53 GMT   |   Update On 2018-01-06 18:53 GMT
மாற்றுத்திறனாளிகள் நலனில் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்கள் மட்டுமே அக்கறை செலுத்துவதாக பாராளுமன்ற குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #Parliament #Disabled
புதுடெல்லி:

மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை தொடர்பாக பாராளுமன்ற குழு ஒன்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், 36 மாநிலங்களில் 6 மாநிலங் கள் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண் பதற்காக ஒரு துறை அல்லது மாவட்ட சமூகநல அதிகாரிகளை நியமித்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, மத்தியபிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே இதனை செய்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.



மத்திய அரசு இதுதொடர்பாக குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்கியும், மற்ற மாநிலங்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது, மாற்றுத்திறனாளிகள் நலன் மீதான அந்த மாநில அரசுகளின் அலட்சியத்தையே காட்டுகிறது. எனவே இந்த துறை உடனடியாக தலையிட்டு அந்த மாநில அரசுகளில் இதற்கான துறையை தொடங்கவும், மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.  #Parliament #Disabled #tamilnews
Tags:    

Similar News