செய்திகள்

முத்தலாக் மசோதா: மாநிலங்களவையில் இன்று தாக்கல்

Published On 2018-01-01 20:28 GMT   |   Update On 2018-01-01 20:28 GMT
பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் தொடர்பான மசோதாவை மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் தொடர்பான மசோதாவை மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.

ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் எனக்கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடந்த 28-ம் தேதி தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவில் உள்ள கிரிமினல் சட்டப்பிரிவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியது. அப்போது பேசிய ரவிஷங்கர் பிரசாத், பெண்களின் உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கவே இந்த மசோதா. இதில் மதத்திற்கு தொடர்பில்லை என கூறினார். மக்களவையில் இரவு வரை நீடித்த விவாதத்துக்கு பிறகு முத்தலாக் மசோதா நிறைவேறியது.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் தொடர்பான மசோதாவை மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று தாக்கல் செய்கிறார்.

இந்த மசோதாவின் மீது மாநிலங்களவையில் தொடர்ந்து விவாதம் நடைபெறும். அதன்பின்னர் தேவைப்பட்டால் உறுப்பினர்களின் ஆலோசனைக்கேற்ப சில திருத்தங்களுடன் இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி கையொப்பமிட்ட பின்னர், இந்த மசோதா சட்ட வடிவம் பெற்று நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilNews  #TripleTalaqBill
Tags:    

Similar News