செய்திகள்

மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு

Published On 2017-12-31 12:37 GMT   |   Update On 2017-12-31 12:37 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி இன்று மாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. #Sabarimala #Ayyappatemple #Makaravilakkufestival

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்ய செல்கிறார்கள். 

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதரி, கோவில் நடையை திறந்து, கீழ் திருமுட்டத்தில் அக்னி குண்டத்தை ஏற்றிவைத்து பூஜை செய்தார். இன்றிலிருந்து 21 நாட்களுக்கு மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது.



முன்னதாக இன்று காலை அஷ்டாபிஷேகத்துக்கு பின்னர் நெய்யாபிஷேகம், அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமம் ஆகியவற்றை ஆலய தந்திரி மகேஷ் மோகனாரு நடத்தினார்.

#tamilnews #Sabarimala #Ayyappatemple #Makaravilakkufestival
Tags:    

Similar News