செய்திகள்

பிரதமர் மோடியுடன் ரஷிய துணை பிரதமர் சந்திப்பு

Published On 2017-12-23 15:05 GMT   |   Update On 2017-12-23 15:05 GMT
இந்தியா வந்துள்ள ரஷிய துணை பிரதமர் டிமிர்ட்டி ரோகோசின் இன்று புதுடெல்லியில் பிரதமர் மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:

இந்தியா - ரஷியா இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட தொடர்புகளை பலப்படுத்தும் விதமாக ரஷிய துணை பிரதமர் டிமிர்ட்டி ரோகோசின் மற்றும் அந்நாட்டு உயரதிகாரிகள் டெல்லி வந்துள்ளனர்.

இந்தியாவுக்கு ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ரஷியா முதலிடத்தில் உள்ள நிலையில் இன்று மாலை ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்த டிமிர்ட்டி ரோகோசின் இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
Tags:    

Similar News