செய்திகள்

புகையிலை பொருட்கள் தொடர்பான எச்சரிக்கை விளம்பரம்: இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Published On 2017-12-22 11:43 GMT   |   Update On 2017-12-22 11:43 GMT
புகையிலை பொருட்களில் எச்சரிக்கை விளம்பரம் பாக்கெட்களின் 85 சதவீதம் இடத்தில் அமைந்திருக்க வேண்டும் என்ற நடைமுறையை நீக்கிய கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.
புதுடெல்லி:

புகையிலை பொருட்களில் எச்சரிக்கை விளம்பரம் பாக்கெட்களின் 85 சதவீதம் இடத்தில் அமைந்திருக்க வேண்டும் என்ற நடைமுறையை நீக்கிய கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.

புகையிலை பொருட்கள் தொடர்பான எச்சரிக்கை விளம்பரம் பாக்கெட்களின் 85 சதவீதம் இடத்தில் அமைந்திருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு கடந்த 2014-ம் ஆண்டு சட்டதிருத்தம் ஒன்றை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசின் உத்தரவு செல்லாது என்று கர்நாடக ஐகோர்ட் 15-12-2017 அன்று தீர்ப்பளித்தது.



இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சில தொண்டு நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. ஐகோர்ட்டின் தீர்ப்பின்மீது இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், டிசம்பர் 15-ம் அளித்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டின் இணையதளத்தில் வெளியிட அனுமதி அளித்து, இவ்வழக்கின் மறு விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News