செய்திகள்

குஜராத்தில் நாட்டின் முதல் ரெயில்வே பல்கலை. : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2017-12-20 15:05 GMT   |   Update On 2017-12-20 15:05 GMT
நாட்டின் முதல் தேசிய ரெயில்வே பல்கலைக்கழகம் குஜராத் மாநிலம் வதோதராவில் அமைய உள்ளதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.அரசு பொறுப்பேற்றதும் ரயில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது போது பிரதமர் மோடி பேசுகையில், ரயில்வே துறையை நவீனமயமாக்கி ரயில்வே துறையில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்திட ரயில்வே பல்கலை. துவக்குவது அவசியம் என்று கூறியிருந்தார்.

அதற்கேற்ப, குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ரெயில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அது தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகள் எதுவும் நடக்கவில்லை.

இதற்கிடையே, கடந்த மூன்று மாதங்களாக மத்திய ரயில்வே மந்திரி பியூஸ் கோயல், ரயில்வே வாரிய தலைவர் அஷ்வனி லோஹானி ஆகியோர் இதற்கான நடவடிக்கையை எடுத்து வந்தனர். இதனையடுத்து, இதற்கு மத்திய மந்திரி சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் பின்னர், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News