செய்திகள்

இமாசல் தேர்தலில் நோட்டாவுக்கு 34 ஆயிரம் வாக்குகள்: 48.8 சதவீத வாக்குகள் பெற்றது பா.ஜ.க.

Published On 2017-12-18 20:57 GMT   |   Update On 2017-12-18 20:57 GMT
இமாசலபிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 48.8 சதவீத வாக்குகள் விழுந்துள்ளன. எந்த வேட்பாளரையும் ஆதரிக்காத 34 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து உள்ளனர்.
சிம்லா:

இமாசலபிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 48.8 சதவீத வாக்குகள் விழுந்துள்ளன. எந்த வேட்பாளரையும் ஆதரிக்காத 34 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து உள்ளனர்.

இமாசல் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பா.ஜ.க. 44 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளைப் பிடித்து எதிர்க்கட்சியானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் பா.ஜ.க. 48.8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 18,46,432. இதையடுத்து காங்கிரஸ் கட்சி 41.7 சதவீதம், அதாவது 15,77,450 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட நோட்டாவுக்கு 34,232 வாக்குகள் பதிவாகி உள்ளன.

கடந்த சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட பா.ஜ.க. இந்த முறை 10 சதவீதம் அதிகமாக பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் கடந்த தேர்தலை விட  1.1 சதவீதம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது. 
Tags:    

Similar News