செய்திகள்

மோடி பிறந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர்

Published On 2017-12-18 14:29 GMT   |   Update On 2017-12-18 14:29 GMT
குஜராத் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி பிறந்த மெஹ்சானா மாவட்டம், உன்ஜா தொகுதியில் காங்கிரஸ் கட்சி பெண் வேட்பாளர் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி கண்டுள்ளார்.
அகமதாபாத்:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17-9-1950 அன்று (அந்நாள் பம்பாய் மாகாணம்) குஜராத் மாநிலம், பிறந்த மெஹ்சானா மாவட்டத்துக்குட்பட்ட வட்நகர் என்ற ஊரில் பிறந்தார். இந்த ஊர் தற்போது உன்ஜா சட்டமன்ற தொகுதிக்குள் அடங்கியுள்ளது.

நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் உன்ஜா சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நாராயண் பட்டேல்(74) நிறுத்தப்பட்டார். அதே தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த 2012-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 19 ஆயிரத்து 529 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல்(40) என்பவரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நாராயண் பட்டேலை எதிர்த்து போட்டியிட்ட ஆஷா பட்டேல் அப்போது தோல்வி அடைந்தார். அந்த நஷ்டக் கணக்கை தற்போதையை வெற்றியின் மூலம் லாபக் கணக்காக ஆஷா பட்டேல் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News